பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி பற்றி ஆலோசனை

மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன்.20)வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 26.06.25 அன்று மதுரை விமானநிலைய ஒடு பாதையில் விமான விபத்து, மற்றும் தீவிரவாத பாதுகாப்பு குறித்து அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெறும் என்றும் பாதுகாப்பு ஒத்திகையின் மூலம் தீவிரவாத தாக்குதல் விமான விபத்து போன்ற அவசரகாலங்களில் ஏற்படும் பேரிடர்களில் விமான பயணிகளை மீட்கும் பணிகளில் ஒத்திகை பயிற்ச்சி அலுவலர்களுக்கு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story