தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், தர்னா

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், தர்னா
X
தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்னாவில் ஈடுபட்டனர்.
அரியலூர், ஜூன் 20- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழக ஏரி  மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் தர்னாவில் ஈடுபட்டனர். அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகம் உள்ள நிலையில், புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து அரியலூர் மாவட்டம் சுக்கிரன் ஏரி, கரைவெட்டி ஏரி, மானோடை ஏரி மற்றும் ஆண்டி ஒடை ஏரி உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். ராயம்புரம், குழுமூர், உடையார்பாளையத்தில் உள்ள பெரிய ஏரிகளையும், பொன்னேரி வரத்து ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சித்தமல்லி அணைக்கு வரக்கூடிய அனைத்து ஓடைகளையும் தூர்வார வேண்டும். மக்காச்சோளம், நெல், உளுந்து, வாழை விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காதவர் களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றுதர வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும். நிலக்கடலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் நல்ல விதைகள், உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர். விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்குச் செல்ல அனுமதி மறுப்பு:  ஆர்ப்பாட்டம் முடிந்து விவசாயிகள் குறைகேட்புக்  கூட்டத்துக்கு  செல்ல முயன்ற பூ.விசுவாதன் உள்ளிட்டோரை, வெளியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தர்னாவில் ஈடுபட்ட அச்சகத்தினருக்கும் காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி, ஆட்சியரிடம் அனுமதி பெற்றப் பிறகே கூட்டரங்கிற்கு உள்ளேச் செல்ல அனுமதித்தனர். இதனால் ஆட்சியர் வளாகத்தில் அரை மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story