திமுக இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், குரூர் கிராமத்தில் இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்- தலைமை கழக பேச்சாளர்கள் எசனை ஆறுமுகம், சிந்துமதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், குரூர் கிராமத்தில், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.ரோகிலன் தலைமையில், ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் முன்னிலையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்- தலைமை கழக பேச்சாளர் எசனை ஆறுமுகம், கழக இளம் பேச்சாளர் சிந்துமதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்கள். இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், ஆர்.அருண், டிஆர்.சிவசங்கர், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சந்திரமோகன், பாஞ்சாலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story




