தா.பழூர் தாதம்பேட்டையில் கோட்டூர் சர்க்கரை ஆலை மூலம் கரும்பு விதை நாற்று உற்பத்தி மையம் தொடக்கம்

ஜெயகொண்டம் அடுத்து தா பழூர் அருகே தாதம்பேட்டையில் கோட்டூர் சர்க்கரை ஆலை மூலம் கரும்பு விதை நாற்று உற்பத்தி மையத்தினை ஆலயத்தின் பொது மேலாளர் புண்ணியமூர்த்தி திறந்து வைத்தார்.
அரியலூர், ஜூன்.20- ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தாதம்பேட்டையில் கோட்டூர் சர்க்கரை ஆலை .மூலமாக கரும்பு விதை நாற்று உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் விவசாயி பழனிவேல் என்பவரது இடத்தில் கோட்டூர் சர்க்கரை ஆலை மூலமாக கரும்பு விதை நாற்று உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது.புதிதாக துவங்கப்பட்ட கரும்பு விதை நாற்று உற்பத்தி மையத்தினை ஆலையின் பொது மேலாளர் புண்ணியமூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் ஆலையின் உதவி மேலாளர் பிரபாகரன், கரும்பு அலுவலர்கள், கரும்பு ஆய்வாளர்கள், முன்னோடி கரும்பு விவசாயிகள் மற்றும் விதை நாற்று மைய அமைப்பாளர், முன்னோடி கரும்பு விவசாயி தாதம்பேட்டை பழனிவேல் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story