சிறுவாணி குடிநீர் குழாய் உடைப்பு – சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்துத் தண்ணீர் வீணாகிறது!

சிறுவாணி குடிநீர் குழாய் உடைப்பு – சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்துத் தண்ணீர் வீணாகிறது!
X
ராட்சதக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி நீர்மூலத்தில் இருந்து வரும் ராட்சதக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சிக்குச் சிறுவாணி அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர், சிறுவாணி சுத்திகரிப்பு நிலையம் வழியாக பெரிய குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதற்காக சாலையோரம் உள்ள மரம் அகற்றும் பணி ஜே.சி.பி மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியின் போது மரத்தின் அடியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்க்கு சேதம் ஏற்பட்டு, அதில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சம்பவம், தென்மேற்கு பருவமழையினால் சிறுவாணி அணை முழுமையாக நிரம்பாத இந்த சூழ்நிலையில், குடிநீர் வீணாவது பொதுமக்களிடையே கவலையையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து, வழக்கம்போல் குடிநீர் விநியோகத்தை மீட்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோவை மாநகராட்சி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story