வால்பாறை: சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை !
கோவை மாவட்டம் வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது ரோஷினி என்ற சிறுமி நேற்று மாலை காளியம்மன் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது. சம்பவத்தை நேரில் கண்ட தாய் அதிர்ச்சியடைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் வனத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சிறுமியின் உடை மற்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம், பச்சைமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story



