குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா தின விழா
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அபர்ணா ஸ்ரீ கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு யோகா கலைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர் அரசு நடத்திய பல்வேறு யோகா போட்டியில் மாவட்ட, மாநில, சவுத் இந்தியன் லெவல் மற்றும் நேஷனல் லெவலில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றவர் என்பதும், அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றபோது குளித்தலை பள்ளிக்கு நேரில் வந்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா மற்றும் இருபால் ஆசிரியர்கள், யோகா மாணவர்கள் கலந்து கொண்டனர்
Next Story







