அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ேஷாஜி, துணை தலைவர் அன்புமணி, மண்டல செயலாளர் அன்புகுமார் முன்னிலை வகித்தனர்.ஆட்சியில் கடந்த 2009ல் கொண்டு வரப்பட்ட அரசாணை 354ஐ அமல்படுத்த வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், துணை தலைவர் கணேஷ்ராஜா உள்ளிட்ட டாக்டர்கள் பலர்பங்கேற்றனர். மகளிரணி செயலாளர் வாசவி நன்றி கூறினார்.
Next Story