சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்

மதுரை திருநகரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா நிகழ்வில் கலந்து கொண்டனர்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 1250 பேர் திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று (ஜூன்.20) யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. உலகில் அன்பும் அரவணணப்பு சகோதரத்துவ நிகழ்வுக்கு வழிவகுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக யோகாசனங்களை செய்தனர். இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் பி ஆனந்த் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பள்ளித் தலைவர் சரவணன் பள்ளிச்செயலாளர் கண்ணன் பள்ளி இயக்குனர் முனைவர் ப. நடன குருநாதன் வழிநடத்துதலில் இவ்விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Next Story