முத்துராமலிங்கத் தேவர் வீட்டிலிருந்து வேல் யாத்திரை

மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த வீட்டிலிருந்து வேல் யாத்திரை நேற்று மாலை தொடங்கியது.
மதுரையில் நாளை( ஜூன்.22)நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் பல்வேறு புனித இடங்களில் இருந்து வேல் பூஜை செய்து மாநாட்டிற்கு கொண்டு சென்று வருகின்றனர் அந்த வகையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் மதுரை திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த வீட்டில் நேற்று (ஜூன்.20) மாலை வேல் பூஜை செய்து வேல் சுமந்தவாறு திருப்பரங்குன்றம் பகுதிகளில் யாத்திரையாக சென்று மாநாடு நடைபெறும் இடத்திற்கு கொண்டு சென்றார். இதில் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நசிங்க பெருமாள், மாவட்டத் தலைவர் சிவலிங்கம் மண்டல தலைவர் கே பி வேல்முருகன் மற்றும் ஏராளமான பாஜகவில் கலந்து கொண்டனர்.
Next Story