வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த பொதுமக்கள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பி.பள்ளிப்பட்டி பொம்மிடி ஊராட்சிகளில் உள்ள 23 கிராமங்களில் உள்ள 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் லூர்துபுரம்,வைரனூர் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் இலவச பட்டா கேட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்று குவிந்தனர் அவர்கள் அரூர் கோட்ட உதவி ஆட்சியர் சின்னசாமியிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் வழங்கினர் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Next Story





