ராமநாதபுரம் யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தில் யோகா விழிப்புணர்வு ஏற்படுத்த பாக் ஜலசந்தி கடலில் ஜலயோகா
ராமநாதபுரம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தை சேர்ந்த இருவர் யோகா விழிப்புணர்வுக்காக கடலில் மிதந்து ஜலயோகா செய்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையையடுத்து ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. சர்வதேச யோகா தினமான இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் அடுத்த வில்லூண்டி வடக்கு பாக் ஜலசந்தி கடலில் சுமார் 10 அடி ஆழத்தில் மிதந்தபடியே ராமேஸ்வரம் மெய்யம்புளியை சேர்ந்த சுடலை மற்றும் அதேபகுதியை சேர்ந்த கிஷோர் கார்த்தி என்ற 15 வயது சிறுவன் என இருவர் பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடலில் மிதந்து ஜலயோகா செய்தார். கடலில் மிதந்தவாறு யோகாவில் ஈடுபட்ட இவரது முயற்சியை அப்பகுதி மக்களும், மீனவர்களும் உற்சாகபடுத்தினர். உலக யோகா தினத்தன்று மட்டும் பொதுமக்கள் யோகா ஆசனங்களை செய்யாமல் தினசரி யோகாசனம் செய்தால் உடலின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ன ஜல யோகாவில் ஈடுபட்ட சுடலை தெரிவித்தார்.
Next Story