நலத்திட்ட உதவிகளை வழங்கிய தவெக கட்சியினர்

மதுரை உசிலம்பட்டியில் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசமரத்துப்பட்டி கிராமத்தில் நேற்று ( ஜூன்.20)நடைபெற்றது . இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட், புக், பேனா மற்றும் 500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் மகாலிங்கம் தலைமையிலான தவெக நிர்வாகிகள் வழங்கினார்கள்.
Next Story