தூக்கிட்டு வாலிபர் தற்கொலை.

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை.
X
மதுரை வாடிப்பட்டி அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிபள்ளம் வடக்கு தெருவில் வசிக்கும் கணேசனின் மகன் செல்வராஜ் ( 38) என்பவர் மதுவுக்கு அடிமையானவர். இவர் தினமும் மது அருந்திவிட்டு வருவதால் இவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் .19) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் இந்திராணி காடுபட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story