குற்றாலத்தில் கீழே கிடந்த தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைப்பு

குற்றாலத்தில் கீழே கிடந்த தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைப்பு
X
கீழே கிடந்த தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைப்பு
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார். ஐந்தருவி பகுதியில் தங்க செயின் கீழே கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அதனை எடுத்து அக்கம் பக்கத்தினர்களிடம் இதை யாருடையது என கேட்ட நிலையில், யாரும் உரிமை கோராத நிலையில், 8 கிராம் மதிக்கத்தக்க அந்த தங்க செயினை குற்றாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதில் நேர்மை தவறாது காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பொன்னாடை அணிவித்து போலீசார் பாராட்டினர்.
Next Story