திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்கம்
திருச்செங்கோடு நகராட்சி கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூஆறு லட்சம் மதிப்பீட்டில் நிழற்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை, திருச்செங்கோடு நகராட்சி கூட்டப்பள்ளி நடுநிலை பள்ளியில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம், மற்றும் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், திருச்செங்கோடு நகராட்சி நெசவாளர் காலனி உயர் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பள்ளி மேம்பாட்டு நிதி ரூ 32 லட்சம் மதிப்பீட்டில் சட்டையம்புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப் பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 15லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் மலையடிவாரம் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப் பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ16 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா பூங்கா பகுதியில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் பள்ளி மேம்பாட்டு நிதி 32 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் என சுமார் ஒரு கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி, திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர் நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சின்ராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் நடேசன்,கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள் சண்முக வடிவு, ராஜா, திவ்யா வெங்கடேஸ்வரன், மல்லிகா, செல்லம்மாள் தேவராஜன், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், மகேஸ்வரி, ராதா சேகர்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மயில் ஈஸ்வரன், நந்தகுமார், சேன்யோ குமார், ஆஞ்சநேயா அசோக்குமார் ஜெயக்குமார் ஆகியோர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கொமதேகநிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story



