ராமநாதபுரம் யோகா ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பட்டம், பட்டயம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தினர் கருப்புபேட்ஜ் அணிந்து உலக யோகா தினத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்
ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு யோகாசனக் கூட்டமைப்பின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் காசிநாததுரை தலைமையில் தமிழ்நாடு அரசு தற்காலிக யோகாசன பயிற்சி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு வழங்கிய ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் சார்பில் வழங்கிய நிதியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் யோகாசன பயிற்சி ஆசிரியர்களுக்கு இயக்குனர் மணவாளன் என்பவர் இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் முறைகேடு செய்து வருகிறார் குடும்பம் மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ளதாக கூறி சென்ற வாரம், மண் குழியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையும் கண்டுக்காமல் உலக யோகா தினமான இன்று பல்வேறு உயிர்களைக் காப்பாற்றும் இந்த ஆசிரியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்காமல் மிகுந்த வேதனைக்கு உட்படுத்திவருவதாக கூறினர்.மேலும் இந்த குறைந்தசம்பளத்தை பெறுவதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்தும் தோப்பு கரணம் போட்டும் அரசின் கவனத்தை ஈர்த்தனர் இரண்டு வருட சம்பளத்தை வழங்கவில்லை என்றால் நாங்கள் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தங்கள் குடும்பத்துடன் போராடுவோம் என்றனர் எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு இயக்குனர்களிடம் தெரிவித்து சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட பொருப்பாளர் ஸ்ரீதரன், புதுக்கோட்டை மாவட்ட பொருப்பாளர் தர்மராஜ், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஷாஜகான், கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story