காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம்

காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம்
X
காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் லோகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தொடர்பான அறிக்கையை இளநிலை உதவியாளர் சுமதி வாசித்தார். இதனையடுத்து பேரூ ராட்சியில் பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகர் மற்றும் வள்ளலார் நகர் பகுதிகளில் ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்தல், மாரியம்மன் கோவில் தெரு, செல் லியம்மன் கோவில் தெரு, போலீஸ் லைன் ஆகிய பகுதிகளில் ரூ.101 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைத்து சிமெண்டு சாலை அமைத்தல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக பொது விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் தங்க ளது வார்டு பகுதிகளுக்குத் தேவையான சாலை, குடிநீர், கழி வுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசி னர். இதில் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பேரூராட்சி மன்ற, அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story