குளத்து பாளையத்தில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விபத்து.

குளத்து பாளையத்தில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விபத்து.
குளத்து பாளையத்தில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விபத்து. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 75 . இவர் ஜூன் 19ஆம் தேதி மாலை 5 மணி அளவில் திருச்சி - கரூர் சாலையில் அவரது மாட்டு வண்டியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கரூர் , புன்னம்சத்திரம் , எம்ஜிஆர் நகரை சேர்ந்த சண்முகம் வயது 41 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி , ராமசாமி ஓட்டி சென்ற மாட்டு வண்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் இடது புறம் கட்டப்பட்டிருந்த மாடு படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தது. மாட்டு வண்டியும் சேதமடைந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற ராமசாமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ராமசாமி அளித்த புகாரில் லாரியை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டிய சண்முகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story