பாப்பநாயக்கன்பட்டியில் காசநோய் தாக்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை.

பாப்பநாயக்கன்பட்டியில் காசநோய் தாக்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை.
பாப்பநாயக்கன்பட்டியில் காசநோய் தாக்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பாப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் வயது 52. இவர் கடந்த 25 வருடங்களாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு காச நோய் கண்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் அவரது வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர் ராமசாமி அளித்த புகாரில் உயிரிழந்த மகேஸ்வரன் உடலை உடற்கூறு ஆய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story