ரேஷன் கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
போரூர் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போரூர் தெள்ளியார் அகரம் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர் அவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கைரேகை வைப்பதுடன் கண் கருவிழிகளையும் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் தர முடியும் என ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருந்து பொருட்கள் முறையாக வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story






