இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிர்ரிழந்தார்

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிர்ரிழந்தார்
X
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிர்ரிழந்தார்
திருவள்ளூர் இருசக்கர வாகனத்தின் மீது சவுடு மண் ஏற்றி எதிரே வந்த லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு கேபிள் நெட்வொர்க் தற்காலிக ஊழியர் இளையராஜா, உயிரிழந்ததை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, வயது 45 இவர் பூண்டி பகுதியில் அரசு கேபிள் நெட்வொர்க்கில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இன்று வழக்கம்போல் புல்லரம்பாக்கம் பகுதியில் அவரது வீட்டில் இருந்து பூண்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது கிருஷ்ணா நதி நீர் கால்வாய் அருகே சென்று கொண்டிருந்தபோது சீத்தஞ்சேரி பகுதியில் இருந்து சவுடு மண் ஏற்றி கொண்டு எதிரே வந்த லாரி இளையராஜா மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையின் பலத்த காயமடைந்து நிலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் காவல்துறையினருக்கும் 108 ஆம்புலன்ஸ் க்கும் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் இளையராஜாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், சவுடு மண் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளையராஜா உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுனரை கைது செய்யவில்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புல்லரம்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் அவருடைய உறவினர்கள், பொதுமக்கள், என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு பக்கங்களிலும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புல்லரம்பாக்கம், காவல்துறையினர் பொதுமக்களிடம் பேசி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சாலை மறியலில் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story