சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி 

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி 
X
பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வட்டார வள மையத்தில், இல்லம் தேடிக் கல்வி பயிற்சி சார்ந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 25 தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.  பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் எம்.கே.ராமமூர்த்தி, மனோகரன் முன்னிலையில், வட்டார வள மேற்பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்து பயிற்சியின் நோக்கம் பற்றி கூறினார்.  பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதனலட்சுமி மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் அஞ்சலிதேவி ஆகியோர் பார்வையிட்டனர்.  பயிற்சியில் முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டது.  பயிற்சியின் கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் செயல்பட்டார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு காலை, மாலை சிற்றுண்டியும், மதிய உணவும், பயணப் படியும் வழங்கப்பட்டது. நிறைவாக தன்னார்வலர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
Next Story