அரசு கோவில் நிலம் ஆக்கிரமிப்பா? பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

அரசு கோவில் நிலம் ஆக்கிரமிப்பா? பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை
X
அரசு கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் வாடகை கடிதம் வந்துள்ளதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் அப்புராயர் சத்திரம் உள்ளது. இதில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அந்த காலத்தில் கிருஷ்ணதேவராயர் மன்னர் இங்கு வந்து ஓய்வெடுத்து செல்வார் என்றும், குதிரை படைகளை இங்குதான் கட்டி வளர்த்து வந்தார் என்றும் கூறுவார்கள். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த பகுதியில், பல தலைமுறைகளாக பல குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டி வாழ்ந்து வருவதாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி, காலி செய்யச்சொல்லி எச்சரிக்கை விடப்பட்டது. இதுவரை 84 வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு, அதில் 50 நபர்கள், நாங்கள் வீட்டினை காலி செய்யாமல், வாடகை கொடுத்து விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அதனால் அவர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 நபர்களின் வீடுகள், அரசு சார்பில் காலி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் வாடகை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி வசம் புகார் மனு கொடுத்தனர். இது குறித்து அரசு தரப்பில் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
Next Story