அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

X
Komarapalayam King 24x7 |21 Jun 2025 8:29 PM ISTகுமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்று, இணை செயல்பாடுகளில் சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்க தமிழக அரசு சார்பில் உத்திரவிடப்பட்டுள்ளது. இதன்படி குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இளவரசன், பிரசன்னா, குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி கனிகா ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, காமராஜர் விருதும், ரொக்கப்பரிசு தலா 10 ஆயிரமும் வழங்கி பாராட்டினார். இவர்களை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்தரூபி, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் பாராட்டினார்கள்.
Next Story
