நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினம். பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம் முதன்மை மாவட்ட நீதிபதி வி. பத்மநாபன் தலைமையில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், சார்பு நீதிபதி திரு. முரளிதர கண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, நீதித்துறை நடுவரின் என்-2, கவிதா, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திருமதி ரேஷ்மா, கூடுதல் உரிமையியல் நீதிபதி தினேஷ் மற்றும் குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ராஜசேகரன் உட்பட நீதிமன்ற ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். பெரம்பலூர் இயற்கை மருத்துவமனையின் மருத்துவரும், யோகா நிபுணருமான வேல்முருகன் அவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சி அளித்து யோகா பயிற்சி செய்வதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் தெளிவாக அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
Next Story






