ஆலங்குளம் அருகே மூதாட்டியிடம் நகை திருட்டு

ஆலங்குளம் அருகே மூதாட்டியிடம் நகை திருட்டு
X
மூதாட்டியிடம் நகை திருட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் புஷ்பம்(65). அவரது பக்கத்து வீட்டில் அடையாளம் தெரியாத 2 நபா்கள் கொலுசு ஒன்றை பாஸீஷ் செய்து கொடுத்தனராம். அதைப் பாா்த்த மூதாட்டி புஷ்பம் தனது வீட்டில் இருந்த சுமாா் 33 கிராம் தங்கச் சங்கிலியை பாலீஷ் போட்டுத் தருமாறு அந்த நபா்களிடம் கூறினாராம். அதைப் பெற்றுக் கொண்ட அந்த நபா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கவரிங் சங்கிலியை கொடுத்து விட்டு தப்பினராம். அவா்கள் சென்ற பின்னரே போலி நகை என தெரிய வந்ததாம். இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து நகை மோசடி செய்த இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனா்.
Next Story