கோவை: ஹார்டுவேர் கடையில் தீவிபத்து – லட்சக்கணக்கில் சேதம்
கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஹார்டுவேர் கடையில் நேற்று மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எதிரே உள்ள இந்த கடையில் ஏற்பட்ட தீயை, பொதுமக்கள் தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்தில் அணைத்தனர். இந்த சம்பவத்தில் கடையில் இருந்த ஹார்டுவேர் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. லட்சக்கணக்கில் பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story



