எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி !

எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி !
X
கீழடி அகழாய்வு குறித்து, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஏற்கனவே தெளிவான விளக்கமளித்துள்ளதாகவும், அதிமுக அரசும் அதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கோவையில் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, திமுகவின் ஆட்சியில் மக்கள் கொந்தளிப்பை மறைக்கவே தனது மீது கேலிச் சித்திரங்கள் வெளியிடப்படுவதாகக் கூறினார். கீழடி அகழாய்வு குறித்து, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஏற்கனவே தெளிவான விளக்கமளித்துள்ளதாகவும், அதிமுக அரசும் அதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் தெரிவித்தார். முருக பக்தர்கள் மாநாடு பற்றி, ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது உரிமை எனக் கூறி, மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார். அமித்ஷாவின் மொழிக்குறித்த கருத்து பற்றி, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம் என விளக்கினார். திமுக உறுப்பினர்களின் பேசும் முறையைக் குறித்த அவர், அதிமுக ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இது போன்ற அவதூறுகள் மக்கள் மனதில் எதிரொலி ஏற்படுத்தி, 2026 தேர்தலில் தக்க பதிலை அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். யோகா தினம் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், யோகா உடல்நலத்திற்கு மிக முக்கியம் என்றும், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story