கோவை: கோவையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்!

X
சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாநகர காவல்துறையின் சார்பில் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் ஸ்கேட்டிங் மைதானத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பிரம்ம குமாரி அமைப்புகள் இணைந்து யோகா நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று யோகாசனங்களில் ஈடுபட்டனர். அதேபோல், கோவை அரசு கலைக் கல்லூரியில், தேசிய மாணவர் படையின் (NCC) சார்பில் மாணவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டு யோகாவின் ஆரோக்கிய பயன்களை பகிர்ந்தனர். மனச்சாந்தி மற்றும் உடல் நலத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடந்த இந்த நிகழ்ச்சிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
Next Story

