திருவோணம் அருகே சாலை விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலி

X
திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா் கறம்பக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திருவோணம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ரமேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ரமேஷின் உடலை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story

