கோவை: பாஜகவின் மொழி அரசியலை விமர்சித்த வைகோ

X
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். எதிர்வரும் 31ஆவது பொதுக்குழு ஈரோட்டில் நடைபெறும் என கூறிய அவர், கூட்டணிக்கான முடிவுகளை திமுக தலைமை எடுக்கும் எனவும் தெரிவித்தார். அமித்ஷாவின் ஆங்கில எதிர்ப்பு கருத்துகளை கண்டித்த வைகோ, தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் சம முக்கியத்துவம் உள்ளது என்றார். மாநில மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் நிலைபாடு எனவும் கூறினார். பாஜக மற்றும் RSS அமைப்புகள் இந்துத்துவா, பாரத், சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கின்றன,பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்றும் வைகோ குற்றம்சாட்டினார். ஒன்றியம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பு அர்த்தமற்றது என்றும் தெரிவித்தார். மத்திய விசாரணை அமைப்புகள் இந்துத்துவாவுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்றார். பாமக உள்ளக முரண்பாடுகள் குறித்து பேச விருப்பமில்லை என கூறிய வைகோ, ராமதாஸ்–அன்புமணி மோதல் காலப்போக்கில் தீரலாம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
Next Story

