பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
X
உற்சவம்
கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து ஆராதனை நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை, ஆராதனை நடைபெற்றது. மேலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் வீதியுலா உற்சவம் தேரோடும் வீதிகளில் நடந்தது.
Next Story