கல்லுாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த பழங்கூரைச் சேர்ந்த ஏழுமலை மகள் தீனதிரிஷா, 19; திருக்கோவிலுார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை கல்லுாரிக்கு சென்ற மாணவி, மதியம் 12:30 மணிக்கு உணவு இடைவேளையின் போது, மூன்றாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். கல்லுாரி நுழைவாயில் பால்கனி அருகே விழுந்த மாணவி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். திருக்கோவிலுார் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Next Story

