சவேரியார் தேவாலயத்தில் நற்கருணை திருவீதி உலா

கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் நற்கருணை திருவீதி உலா
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது. நீங்க தினசரி திருப்பலிகள் மற்றும் ஞாயிறு தோறும் கடன் திருப்பலி நடைபெறுவது வழக்கம். தேவாலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் தூய நற்கருணை திருவீதி உலா நடைபெற்றது. பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமை வகித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கோவிலூரின் முக்கிய வீதிகள் வழியாக நற்கருணை திருவீதி உலா நடைப்பெற்றது. இதில் வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story