மருத்துவர்களுக்கான விளையாட்டுப் போட்டி

X
திண்டுக்கல் சிட்டி ஸ்கொயர் மைதானத்தில் அகில இந்திய மயக்க மருத்துவர்கள் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் மாநில தலைவர் மருத்துவர் கிருபாகரன் தலைமையில் மருத்துவர்களுக்கான கிரிக்கெட் போட்டி டேபிள் டென்னிஸ் கேரம் பேட்மிட்டன் டென்னிஸ் ஆகிய போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் மாநிலச் செயலாளர் மருத்துவர் சீனிவாசன் மாநில பொருளாளர் மருத்துவர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். மருத்துவர்களுக்கான விளையாட்டு போட்டி குறித்து மாநில தலைவர் தேர்வு மருத்துவர் ராம்குமார் பேட்டியளித்தார். தமிழ்நாடு முழுவதும் மயக்க மருத்துவர்கள் சங்கம் சார்பில் சுமார் 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆண்கள் பெண்கள் என போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர். இப்போட்டியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்க உள்ளனர். மேலும் இந்நிகழ்வில் அகில இந்திய மயக்க மருத்துவர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட தலைவர் மருத்துவர் செந்தில் சிவ கணேசன் செயலாளர் மருத்துவர் சிராஜுதீன் பொருளாளர் மருத்துவர் லோகநாதன் உட்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சிட்டி ஸ்கொயர் மைதானத்தை வழங்கிய மருத்துவர் முரளிதரன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
Next Story

