மாணவர்களுக்கு மிதிவண்டி கொடுக்கும் நிகழ்வு

X
திண்டுக்கல் தனியார் பள்ளி 12 வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி கொடுக்கும் நிகழ்வில் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார். பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது கூறியதாவது இந்துக்களாக இருந்தவர்கள் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறி உள்ளனர். அனைவரும் ஒன்றுதான். இந்தியாவைப் பொறுத்தவரை மும்மதமும் ஏற்றுக்கொண்ட மதம். அனைவரும் அண்ணன் தம்பிகளாகவும் உறவினர்களாகவும் வாழ்கின்றனர். வேறுபாட்டை யாராலும் ஏற்படுத்த முடியாது. தமிழ் மண்ணில் பாஜக கால் பதிக்க முடியாது. அனைவரும் தனிப்பட்ட கருத்துக்கள் கூறலாம் ஆனால், கொள்கையில் விளைகிறது கூட்டணி. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நான்கு மாதத்திற்கு பின்பு 2900 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. இன்னும் 1800 கோடி வர வேண்டி உள்ளது. கல்வி நிதியே தமிழ்நாட்டிற்கு கொடுக்கவில்லை. அடிப்படைக் கல்விக்கு தரவேண்டிய பணத்தை மத்திய அரசு தரவில்லை. எந்த அடிப்படையில் மக்களை சந்திக்க முடியும். பாஜக அரசிற்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை. பாஜக அரசு கடவுள், இந்துக்கள் என இனப்பிரச்சாரத்தை எடுக்கின்றனர். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி.
Next Story

