தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு

X
மார்த்தாண்டம் அருகே பந்தி விளையில் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் போதகராக அதே பகுதியை சேர்ந்த ஆமோஸ் (42) என்பவர் உள்ளார். இங்கு காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தேவாலயத்துக்கு வந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்து, பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து உள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தேவாலயம் வந்து விசாரணை நடத்தினர். உண்டியலில் ரூபாய் 5 ஆயிரம் காணிக்கை பணம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து செய்தனர். மேலும் திருடர்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களா? வெளி நபர்களா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

