இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம்?

X
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே காட்டெருமை, காட்டுப்பன்றிகள் மற்றும் யானைகளால் கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சமடைந்து வரக்கூடிய நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு வரக்கூடிய இரண்டு பிரதான சாலைகள் உள்ளது. இதில் வத்தலகுண்டு- கொடைக்கானல் பிரதான சாலை பல தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள் 24 மணி நேரமும் வத்தலகுண்டு கொடைக்கானல் பிரதான சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இந்நிலையில் நேற்று இரவு கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையில் வாழை கிரி மற்றும் பண்ணை காட்டிற்கு இடைப்பட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்லக்கூடிய வீடியோ காட்சிகளை அப்பகுதியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. ஒற்றை சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ள நிலையில் சிறுத்தையின் நடமாட்டம் உண்மையனின் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் வனப்பகுதிகளில் அதிகம் உள்ள யூகாலிப்டஸ் மரம் ஊசி இலை மரம் அகற்றிவிட்டு வனவிலங்குகள் அதிகம் உண்ணும் தாவர நாட்டு மரம் வளர்த்து வனவிலங்குகளை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பாதுகாப்புடன் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
Next Story

