கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் அடிக்கல்

X
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட தெருவுக்கடை, பொட்டக்குழியில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம் பி விஜய் வசந்த் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ , காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், துணைத்தலைவர் செல்வம் மற்றும் சுரேஷ்குமார், குமரேசன் உட்பட தெருவுக்கடை பொட்டக்குழி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

