எங்களை ஏமாற்றும் அரசை நாங்கள் நம்ப தயாராக இல்லை

எங்களை ஏமாற்றும் அரசை நாங்கள் நம்ப தயாராக இல்லை
X
எங்களை ஏமாற்றும் திமுக அரசை நாங்கள் நம்ப தயாராக இல்லை என தமிழ்நாடு மேல்நிலை உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிறுவனத் தலைவர் மாயவன் பிச்சாண்டி மகாலில் பேட்டி
திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் மாயவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது நாங்கள் அரசு எதிரானவர்கள் அல்ல. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓட்டளிக்க வேண்டுமென கூறி கோர்ட் வரை சென்று உரிமையை பெற்றவர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது திமுக கொடுத்த வாக்குறுதி ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி கழகம் தமிழ்நாட்டிலே மு.க ஸ்டாலின் தலைமையிலே, இந்த அரசு அமைய வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தமிழ்நாட்டிலேயே எந்த சங்கமும் முன்னெடுக்காத ஒரு பணியை நாங்கள் செய்தோம். எங்களை ஏமாற்றும் திமுக அரசை நாங்கள் நம்ப தயாராக இல்லை. விரைவில் பொதுக்குழு கூடி போராட்டங்களை அறிவிக்கும். நான்கரையாண்டுகளாக செய்யாத திட்டங்களை இனி இவர்கள் செய்ய முடியாது. சிறை நிரப்பும் போராட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்படும். அரசை விரைவில் பணியை வைப்போம். அதற்காக அஞ்ச மாட்டோம். எத்தனை பிரச்சனை வந்தாலும் அது தாங்குவோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு எதிராக மாறி ஓட்டளிக்கவும் தயங்க மாட்டோம் என கூறினார்.
Next Story