கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி

கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உதவி
X
இனயம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட 18-ம் அன்பியத்தை சேர்ந்தவர் லேனடிமை (48). கடந்த 1 - ம் தேதி மாலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அவர் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடலுக்குள் தவறி விழுந்து மாயமானார். பின்னர் கடந்த 4 தேதி தேங்காப்பட்டணம் கடலில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. மீனவர் லேனடிமை குடும்பத்திற்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் 2 லட்சம் காசோலை மற்றும் தனது செந்த நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரம் நிதியுதவியையும் அவரது மனைவி மேரி ஷகிலா விடம் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டாலின், மகிளா காங்கிரஸ் தலைவர் ஷீபா, இனயம் பங்கு பணியாளர் பபியன்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story