ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான

X
நாகை காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 96.28 ஏக்கர் நிலம், நாகை தியாகராஜபுரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், நாகை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உரிமம் பெற்ற நில அளவையர் மூலம் நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் அளவீடு செய்யப்பட்டது. இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராஜ இளம்பெருவழுதி ஆகியோர் முன்னிலையில், மீட்கப்பட்ட நிலம் கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டன. ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ஜெயபால், கோயில் செயல் அலுவலர் தனலெட்சுமி, கோயில் பணியாளர்கள் சிவராஜ், கல்யாண சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர். சுவாதினம் பெறப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் அதிகம் என இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story

