சர்வதேச யோகா தினத்தையொட்டி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உடல் மற்றும் மன ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

X
Namakkal King 24x7 |22 Jun 2025 12:52 PM ISTசர்வதேச யோகா தினத்தின் 2025 ஆம் ஆண்டின் கருப்பொருளான “ஒரே பூமி மற்றும் ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்பதன் வாயிலாக, மனித உடல் நலத்துக்கும் புவியின் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு “உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் செந்தில்குமார் மாணவர்களிடையே இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம், யோகா மற்றும் தியானப் பயிற்சிகளின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மேலும்,இவ்வாண்டுக்கான (2025) சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளான “ஒரே பூமி மற்றும் ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்பதன் வாயிலாக, மனித உடல்நலத்துக்கும் புவியின் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, உடல் நலமும் மன நலமும் சார்ந்த பல்வேறு வகையான யோகா பயிற்சிகளை மாணவ, மாணவியர்களுக்கு செய்து காட்டி, அவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள், யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
