ஊத்தங்கரையில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை தாலூக்கா அலுவலக வளாகத்தில் தொல்குடி திட்ட பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டாட்சியா் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோரி 102 போ் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
Next Story



