ராமநாதபுரம் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்குதல்
ராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட மாணவரணி தலைவர் தமீம் தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மலர்விழிஜெயபாலா தமிழக வெற்றிக் கழக தலைவரின் 51வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர். பின்பு பொதுமக்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். சலவை தொழிலாளிக்கு அயன் பாக்ஸ், பெண்களுக்கு இலவச சேலை, மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டை, தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை, மற்றும் 51 நபர்களுக்கு குடம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Next Story





