ராமநாதபுரம் எச் ராஜா செய்தியாளர் சந்திப்பு
ராமநாதபுரம் இந்துக்களின் ஒற்றுமைக்காகவும் எழுச்சிக்காகவும் தான் மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு என ராமநாதபுரம் வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராமநாதபுரம் பாஜக அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா நாளில் பங்கேற்ற அவர் கூறியதாவது முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு வரலாறு காணாத அளவில் 52 கட்டுப்பாடுகளை விதுத்துள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதில் நீதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார்.முருக பக்தர்கள் யாரும் அங்குள்ள டிஎஸ்பி களிடம் அனுமதி பெற தேவையில்லை வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருபவர்கள் குறிப்பிட்டு இடத்திற்கு முன்பாக வாகனங்களில் வரவேண்டும் தமிழக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் யாராவது இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்களா இல்லவே இல்லை அது ஹிந்துக்களை சமாதானப்படுத்துவதற்காவும் இவர்கள் நடத்திய மாநாடு என தெரிவித்தார். தமிழக அரசு நடத்திய முருகன் மாநாடு சட்டவிரோதமான மாநாடு கோயில் கணக்குகளை காட்டாவிட்டால் எங்கள் கோவில் பணத்தை எப்படி பயன்படுத்தினீர்கள் என கேட்போம் இந்து அறநிலைத்துறை அமைச்சரான சேகர் பாபு முருக பக்தர்கள் மாநாட்டுக்காக வருவோரை வரவேற்க வேண்டும். முருக கடவுளை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்றவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். என்றார். இதில் மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு மாவட்ட யோகா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகநாதன். சிறப்பாக செய்திருந்தார் பொதுமக்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story





