ராமநாதபுரம் நான்காண்டு சாதனை பொதுக்கூட்டம் இளைஞர் அணி சார்பில்நடைபெற்றது

திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது.
ராமநாதபுரம் குமரய்யா கோயில் அருகே கலைஞரின் பிறந்தநாள் மற்றும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.இதில் பேசிய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து இந்த நான்கு ஆண்டுகளில் செய்து முடித்துள்ள ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் என்றார். கடைக்கோடியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கும் பெண்களுக்கான உரிமைத் தொகை, மாணவர்களின் நலன் காக்க உரிமைத்தொகை, மற்றும் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி உள்ள முதல்வருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் மீண்டும் திமுக அரசு அமைய இளைஞர் அணியினர் உழைக்கவேண்டும் பொதுமக்களிடம் திமுக அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவில் நகர் மன்ற தலைவர் ஆர். கே. கார்மேகம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ் கண்ணா, ஒன்றிய துணைச் செயலாளர் கபில்தாஸ், ஒன்றிய பெருந்தலைவர் கே. டி. பிரபாகரன். நகர் இளைஞர் அணி துணைச் அமைப்பாளர் சதீஸ் ஷர்மா, மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
Next Story