குழந்தை கடத்திய அரவாணி கைது.

X
ஆரணி அடுத்த குன்னத்தூரில் குழந்தை கடத்திய அரவாணியை சனிக்கிழமை கிராமிய போலீசார் கைது செய்தனர். ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் அட்சயா(24) என்பவர் செய்யாறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறார். அட்சயாவின் பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் படிக்கும் போது போளூர் அடுத்த அத்திமூர் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 5 மாத பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அட்சயா குழந்தை பராமரிக்க ஆள் தேடிக் கொண்டிருந்த நிலையில் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை தங்கம் என்கிற தங்கபாண்டியன் மூலமாக ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த திருநங்கையான மது என்கிற சரத் ( 25) என்பவர் தனது குழந்தையை பராமரிப்பதாக கூறி அழைத்து வந்துள்ளார். அதன் பேரில் அட்சயாவும் குழந்தையை பராமரிக்க மாதம் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது, இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி மது என்பவர் அவரது தாயிடம் குழந்தையை காட்டிவிட்டு வருவதாக திருநங்கை மது என்கிற சரத் குழந்தையை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதனால் அட்சயா குழந்தையை திருப்பி கேட்டதற்கு ரூபாய் 6 லட்சம் தர வேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விட்டுத்ததாக கூறி இது சம்பந்தமாக ஆரணி கிராமிய போலீசில் அட்சயா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய இன்ஸ்பெக்டர் அகிலன் , எஸ்.ஐ மகாராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து திருநங்கை ஆன மது என்கிற சரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருநங்கையை கைது செய்தது சம்பந்தமாக தகவல் அறிந்ததும் ஆரணி பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒன்று திரண்டு காவல் நிலையத்தில் ஆபாசமாக அருவருப்பான வார்த்தைகளால் பேசி பரபரப்பு ஏற்படுத்தி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

