சௌந்தராபுரம் அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
சௌந்தராபுரம் அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் அருகே செம்மங்கரை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது 42 . இவர் ஜூன் 20 ஆம் தேதி காலை 7:30-மணி அளவில் , சவுந்தராபுரம் விஏஓ அலுவலகம் அருகே வந்தபோது , எதிர் திசையில் திருச்சி மாவட்டம் , முசிறி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி வயது 55 என்பவர் வேகமாக ஓட்டிவந்த அரசு பேருந்து , பன்னீர்செல்வம் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பன்னீர்செல்வம் பலத்த காயமடைந்ததால் அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சம்பவம் தொடர்பாக பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அரசு பேருந்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முத்துசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story




